Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர்

shukrymjm
By shukrymjm டிசம்பர் 24, 2018 19:45

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர்

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய விருப்புவோர் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக அதனை முன்னெடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உதவி செய்பவர்கள்; முன்னறிவித்தல் இன்றி உணவுப் பொருட்களை எடுத்து வருவதினால் அவை வீண் விரையமாகும் நிலை ஏற்படுவதாக கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிரிந்தா கரன் தெரிவித்துள்ளார்;.

உதவி செய்ய விருப்பம் உடையவர்கள் 021 206 0303 அல்லது 077 786 2056 என்ற இலக்கத்தின் ஊடாக பிரதேச செயலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 021 228 5330 அல்லது 077 232 0528 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

shukrymjm
By shukrymjm டிசம்பர் 24, 2018 19:45
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க