கிளிநொச்சியில் கிராமங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன
Related Articles
சீரற்ற வானிலையினால் கிளிநொச்சியில் கிராமங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறித்த பகுதிகளில் இராணுவத்தினர் மீட்பு பணிகளை முன்னெடுத்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவிததார். நேற்றிரவு வழமைக்கு மாறாக 225 தொடக்கம், 370 மில்லி மீற்றர் வரை பெய்த கடும் மழையை அடுத்து வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சியிலுள்ள அனைத்து குளங்களும் வான்பாய்கின்றமையால்; போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.