நிஸ்கோ வர்த்தக சந்தை தற்பொழுது மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வளவில் இடம்பெறுகின்றது. காலை 9.00 மணி தொடக்கம் இரவு 10.00 வரை திறந்திருக்கும். சந்தை எதிர்வரும் 26ம் திகதிவரை இடம்பெறவுள்ளது. இந்த சந்தையில் 150 வர்த்தக கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. 45வது முறையாக இடம்பெறும் நிஸ்கோ வர்த்தக சந்தையை இலங்கை தேசிய இளைஞர் சேவை கூட்டுறவுச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.