அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் ,பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு
Related Articles
அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்கள் 03 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் 17 பேரும், பிரதி அமைச்சர்கள் 07 பேரும் நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவியேற்றனர் அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு :-
அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்கள்
ஹர்ஷ த சில்வா அவர்கள்- பொது வழங்கல்கள், பொருளாதார மறுசீரமைப்பு அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்
அஜித் பீ.பெரேரா அவர்கள் – டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், தகவல் தொழிநுட்ப அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்
சுஜீவ சேமசிங்க அவர்கள் – விஞ்ஞான தொழிநுட்ப, ஆராய்ச்சித் துறை அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர்
இராஜாங்க அமைச்சர்கள்
ரஞ்சன் ராமநாயக்க அவர்கள் – நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி இராஜாங் அமைச்சர்
விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் – கல்வி இராஜாங்க அமைச்சர்
ஜே.சீ.அலவத்துவல அவர்கள் – உள்ளக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்
இரான் விக்ரமரத்ன அவர்கள் – நிதி இராஜாங்க அமைச்சர்
ரஞ்சன் அலுவிஹார அவர்கள் – சுற்றுலா அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
வசந்த அலுவிஹார அவர்கள் – விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
லக்கி ஜயவர்தன அவர்கள் – நகர திட்டமிடல், நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர
நிரோஷன் பெரேரா அவர்கள் – தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
ருவன் விஜேவர்தன அவர்கள் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
சம்பிக்க பிரேமதாச அவர்கள் – மின்சக்தி, மீள் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி இராஜாங்க அமைச்சர்
அசோக்க அபேசிங்க அவர்கள் – போக்குவரத்து சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர்
பைசல் காசிம் அவர்கள் – சுகாதார போசனை, சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர்
எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் – மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்
அமீர் அலி அவர்கள் – விவசாய, நீர்ப்பாசன, கிராமிய பொருளாதாரஅலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
திலிப் வெதஆரச்சி அவர்கள் – மீன்பிடி, நீரியல்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
ஏ.இசட்.எம். செயிட் அவர்கள்- சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்
வடிவேல் சுரேஷ் அவர்கள் – பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
பிரதி அமைச்சர்கள்
அனோமா கமகே அவர்கள் – பெற்றோலிய வள அபிருத்தி பிரதி அமைச்சர்
எட்வட் குணசேகர அவர்கள் – காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அலுவல்கள் பிரதி அமைச்சர்
நளின் பண்டார ஜயமகா அவர்கள் – அபிவிருத்தி மூலோபாயங்கள் பிரதி அமைச்சர்
அஜித் மான்னப்பெரும அவர்கள் – சுற்றாடல்துறை பிரதி அமைச்சர்
கருணாரத்ன பரனவிதான அவர்கள் – திறன் விருத்தி, தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர்
புத்திக பத்திரன அவர்கள் – கைத்தொழில், வாணிப அலுவல்கள் பிரதி அமைச்சர்
பாலித தெவரப்பெரும அவர்கள் – சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர்