fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 22, 2018 13:28

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும். திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 22, 2018 13:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க