fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாவனைக்குதவாத உணவுப்பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 21, 2018 15:38

பாவனைக்குதவாத உணவுப்பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

சிலாபத்தில் மனித பாவனைக்குதவாத உணவுப்பொருட்களை விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிலாபம் நகரிலுள்ள 50 க்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். 15 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10 வர்த்தக நிலையங்களில் இருந்த பாவனைக்குதவாத பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் குறிப்பிட்டுள்ளனர். பண்டிகை காலத்தில் உணவுப்பொருட்களை கொள்வனவு செய்யும்போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மக்களை அறிவுத்தியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 21, 2018 15:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க