fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பண்டிகை கால பாதுகாப்பிற்கென கொழும்பு நகரில் இரண்டாயிரம் பொலிசார் கடமையில்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 20, 2018 13:15

பண்டிகை கால பாதுகாப்பிற்கென கொழும்பு நகரில் இரண்டாயிரம் பொலிசார் கடமையில்

பண்டிகை காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கொழும்பு நகரில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிசார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிசார் சீருடையிலும் சிவில் உடையிலும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். முடிச்சுமாரிகள், கொள்ளையர்கள், மோசடி செய்யும் நபர்கள், ஆகியோர் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படும். அதேபோல் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்துமாறு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக ருவண் குணசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை பொதுமக்கள் தமது உடமைகளை பாதுகாத்துக்கொள்வதற்கு அவதானமாக இருக்கவேண்டுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார். கொழும்பை தவிர ஏனைய பகுதிகளிலும் விசேட பொலிஸ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 20, 2018 13:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க