fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் இன்றைய தினம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 20, 2018 09:39

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் இன்றைய தினம்

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன. பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணைகளின் போது பாராளுமன்ற வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெரா காட்சிகள், தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட காட்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியான காட்சிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார். இதனிடையே பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதலினால் ஏற்பட்ட பொருட்சேதம் 3 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதி சபாநாயகர் குமாரசிறி மேலும் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 20, 2018 09:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க