fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின்லங்கா மோசடிகள் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 19, 2018 18:59

ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின்லங்கா மோசடிகள் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு

ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் மற்றும் மிஹின்லங்கா மோசடிகள் தொடர்பாக கண்டறியப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வகாலம் நீடிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ம் திகதி வரை கால எல்லையை நீடிக்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். 2006ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 2018 ஜனவரி 31ம் திகதி வரையிலான காலப்பகுதியில் ஸ்ரீ லங்கன் எயார் லைன் கம்பனி, ஸ்ரீ லங்கன் கேட்டரிங், மிஹின்லங்கா தனியார் கம்பனி ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் கண்டறியும் இவ்வாணைக்குழுவின் காலம் எதிர்வரும் 31ம் திகதி நிறைவடையவிருந்தது. இதேநேரம் ஆணைக்குழு அங்கத்தவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை இன்று சந்தித்தனர். விசாரணைகளின் நிலைமை குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார். ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அணில் குணரட்ன தலைமையில் இவ்வாணைக்குழு செயற்படுகின்றது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 19, 2018 18:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க