நாட்டில் காணப்படும் வறட்சியான கால நிலையில் டிசம்பர் 20ஆம் திகதியிலிருந்து சிறிய மாற்றம் எதிர்பார்க்கப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கிழக்கு மாகாணக் கரையோரப்பகுதிகளில் குறிப்பாக காலை வேளையில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை மற்றும் ஓரளவு குளிரான வானிலையும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் சில பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் திணைக்களம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.