நீரில் மூழ்கிய இளைஞரின் சடலம் மீட்பு
Related Articles
மட்டக்களப்பு கல்லடி வாவியில் நேற்று நண்பகல் வேளையில் நீரில் மூழ்கிய இளைஞரின் சடலம் இன்று கடற்படையினரால் மீட்டகப்பட்டது. கல்லடி பாலத்தின் கீழ் அமைந்துள்ள வாவியினுள் நேற்று காலை சுமார் பத்து மணியளவில் குறித்த வாலிபர் வீழ்ந்தமையினை அங்கிருந்தவர்கள் அவதானித்துள்ளனர். பின்னர் பொலிசார் மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையை தொடர்ந்து இன்று நண்பகல் வேளையில் டச்பார் பகுதியில் பகுதியில் உள்ள வாவியில் மிதந்த நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது. அத்துடன் இவர்கள் செலுத்திய துவிச்சக்கர வண்டியும் பொலிசாரினால் மீட்கப்பட்டது. மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.