சுமார் 2500 கிலோ கிராம் கழிவு தேயிலை பறிமுதல்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 18, 2018 13:49

சுமார் 2500 கிலோ கிராம் கழிவு தேயிலை பறிமுதல்

2325 கிலோ கிராம் கழிவு தேயிலையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அப்புறப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த கழிவு தேயிலையை உள்ளுர் சந்தையை இலக்காக கொண்டு இரசாயன பதார்த்தங்களை பயன்படுத்தி சிறந்த தேயிலையாக மாற்றியமைக்கும் நோக்கில் எடுத்துச்செல்லப்பட்ட போது இவை கம்பொளை பகுதியில் வைத்து வெலம்பொட பொலிசாரினால் கைப்பற்றப்பட்டன. உடுநுவர பூவெலிகட பகுதிக்கு இவை எடுத்துச்செல்லப்பட்டிருந்தன. உடுநுவர பகுதியில் 2500கும் கூடுதலான கழிவு தேயிலை உற்பத்தி செய்யும் இடங்கள் காணப்படுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். உள்ளுர் மற்றும் வெளிநாடுகளை இலக்காக கொண்டு கழிவு தேயிலையை சிறந்த தேயிலையாக மாற்றியமைப்பதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளன. கழிவு தேயிலையில் சாயம் காணப்படாமையினால் இவற்றிற்கு சுண்ணாம்பு போன்ற இரசாயன பதார்த்தங்களை பயன்படுத்தி அதனை நீராவியில் அவித்ததன் பின்னர் சிறந்த தேயிலையாக பொதியிட்டு சந்தைப்படுத்தப்படுத்தப்படுவதாக சுற்றிவளைப்பின் மூலம் தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலை, தேயிலை சபை அதிகாரிகளினால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 18, 2018 13:49

Default