fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினருக்கு இடையில் விசேட சந்திப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 17, 2018 14:11

ஜனாதிபதி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினருக்கு இடையில் விசேட சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலக காரியாலயத்தில் பேச்சுவார்த்தையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களுக்கிடையில் நேற்றைய தினம் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. நாளைய தினம் பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கிடையில் மற்றுமொரு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 17, 2018 14:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க