Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சமாதானம் நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்கு இயேசுவின் பிறப்பு ஒரு உந்து சக்தி : ஜனாதிபதி

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 17, 2018 12:45

சமாதானம் நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்கு இயேசுவின் பிறப்பு ஒரு உந்து சக்தி : ஜனாதிபதி

சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை பலப்படுத்த இயேசுவின் பிறப்பு மிகவும் உந்து சக்தி என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரச நத்தார் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.  மன்னர் நகரசபை மைதானத்தில் நேற்று பிற்பகல் அரச நாதர் விழா இடம்பெற்றது. மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அவர்களிடம் ஆன்மீக புரட்சி ஒன்றை உருவாக்கவும் இந்த நாதர் விழா கோலாகலமாக இடம்பெற்றது. இயேசுவின் உயரிய தகவலை உலகுக்கு கொண்டு செல்லும் நாதர் பண்டிகைக்கு கிறிஸ்தவ மக்கள் மட்டுமன்றி உலக வாழ் அணைத்து மக்களும் கொண்டாடுவதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஆன்மீக சமூகமொன்றை உருவாக்குவதில் கிறிஸ்தவ மத வழிகாட்டல் அபரிமிதமானது என ஜனாதிபதி தெரிவித்தார்

இந்த நாதர் விழாவில் கரோல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. போட்டிகளில் பரிசில் பெற்றோருக்கு ஜனாதிபதியால் விருதுகள் மற்றும் சான்றதல்கள் வழங்கப்பட்டன. அதி வணக்கத்துக்குரிய பியரே நுயன் வான் வோட் அதிமேட்ரானியர் உள்ளிட்ட அருட்தந்தைமார், மக்கள் பிரதிநிதிகள், பெருமளவிலான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 17, 2018 12:45
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

<

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க