அமெரிக்க உட்துறை விவகார செயலாளர் ரயன் சின்க் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இவ்வருட இறுதிக்குள் ரயன் சின்க் தனது பதவியிலிருந்து விலகுவார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் ரயன் சின்க் தனது பதவிக்காலத்தில் நாட்டிற்கு சிறந்த சேவையை வழங்கியதாகவும் அதற்காக தனது விசேட நன்றியை தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.