fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பரிஸ் உலக காலநிலை ஒப்பந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள 200 நாடுகள் தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 16, 2018 14:27

பரிஸ் உலக காலநிலை ஒப்பந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள 200 நாடுகள் தீர்மானம்

பரிஸ் உலக காலநிலை ஒப்பந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள சர்வதேச நாடுகள் தீர்மானித்துள்ளன. 200 நாடுகளின் பங்கேற்புடன் கடந்த இருவாரகாலமாக போலந்தில் ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றங்கள் குறித்தான மாநாடு நடைபெற்றது. இதன் இறுதி நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது பரிஸ் உலக காலநிலை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதற்கு சகல நாடுகளும் இணக்கம் வெளியிட்டுள்ளன. எவ்வாறெனினும் குறித்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் புவி வெப்பமடைதலின் அபாயகரமான விளைவுகளை தடுப்பதற்கு போதுமானவையாக இல்லையென விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 2015 ம் ஆண்டு பரிஸ் உடன்படிக்கைக்கு மேலதிகமாக நாடுகள் பல்வேறு பொதுவான இணக்கப்பாடுகளுக்கு வந்துள்ளன. உலக வெப்பநிலை அதிகரிக்கும் அளவை குறைப்பதை நோக்கமாக கொண்டு குறித்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 16, 2018 14:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க