fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 14, 2018 14:55

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வேலைத்திட்டம் நாளை முதல் அமுல்ப்படுத்தப்படுமென பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்தின்போது இடம்பெறும் வீதி விபத்துக்களை தவிர்த்து, வாகன நெரிசலை குறைக்கும் நோக்கில் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கென விசேட பொலிஸ் குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பண்டிகை காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதனால் விபத்துக்கள் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகிறது. இவ்வாறு மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளிடமிருந்து பொதுமக்களை பாதுகாப்பது பொலிஸ் திணைக்களத்தின் பாரிய பொறுப்பு என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 14, 2018 14:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க