fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மஹிந்த ராஜபக்ஷவின் மேன்முறையீட்டு மனுமீதான விசாரணைகள் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 14, 2018 13:13

மஹிந்த ராஜபக்ஷவின் மேன்முறையீட்டு மனுமீதான விசாரணைகள் ஆரம்பம்

மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமராக செயற்படுவதற்கு  மற்றும் அமைச்சரவைக்கு எதிராக  மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையுத்தரவை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை தற்போது ஆரம்பமாகியுள்ளது. நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனெக்க அளுவிகாரே மற்றும் விஜித்த மழல்கொட ஆகியோர் முன்னிலையில் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதேவேளை மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு பூரண நீதியரசர் குழுமுன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் நேற்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவின் முதலாவது பிரதிவாதியான பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசங்க சார்பில் அவரது சட்டத்தரணியே இம்மனுவை தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவை ஐவர் அடங்கிய நீதியரசர்கள்க குழு முன்னிலையில் விசாரிக்குமாறும் உச்சநீதிமன்ற நீதிபதி ஈவா வனசுந்தர முன்னிலையில் இதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டாமெனவும் கோரப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையுத்தரவு சட்டதிட்டங்களுக்கு முரணனாதெனவும் அதில் குறைபாடுகள் காணப்படுவதனால் அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாமென அம்மனுவில் கோரப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக அமைச்சரவையில் பதவிவகிப்பதற்கு தடைவிதித்து வெளியிடப்பட்ட இடைக்கால உத்தரவை சவாலுக்குட்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தத்ன சமல் ராஜபக்ஷ , கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மற்றும் ஜொன்ஸ்டன பெர்னாண்டோ ஆகியோர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 14, 2018 13:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க