fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கஷோக்கியின் படுகொலைக்கு பட்டத்து இளவரசர் சல்மான் பொறுப்பு கூறவேண்டும் : அமெரிக்க செனட் சபை

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 14, 2018 13:18

கஷோக்கியின் படுகொலைக்கு பட்டத்து இளவரசர் சல்மான் பொறுப்பு கூறவேண்டும் : அமெரிக்க செனட் சபை

சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலைக்கு சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மட் பின் சல்மான் பொறுப்புக்கூற வேண்டுமென அமெரிக்க செனட் சபை தீர்மானித்துள்ளது. அத்துடன் யெமனில் நடைபெற்றுவரும் போரில் தலையிட்டுள்ள சவுதிக்கும் , மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அமெரிக்கா ஆதரவு வழங்கப்போவதில்லையென்ற வாக்கெடுப்பொன்றும் இடம்பெற்றுள்ளது. கடந்த ஒக்டோபர் இரண்டாம் திகதி துருக்கியின் ஸ்தான்பூன் நகரில் சவுதி தூதரகத்தில் வைத்து ஜமால் கசோக்கி படுகொலை செய்யப்பட்டார். அவர் தனது விவகாரத்திற்து தேவையான ஆவணங்களை பெற்றுக்கொள்ள தூதரகம் சென்றபோதே இப்படுகொலை இடம்பெற்றுள்ளது. கஷோக்கி சவுதி அரேபிய நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து வொசிங்டன் போஷ்ட் பத்திரிகைக்கு கட்டுரை எழுதிவரும் ஊடகவியலாளர் ஆவார். இவரது இவ் ஊடக பணி சவுதி அரேபியாவின் தீவிர எதிர்ப்புக்குள்ளானது. எனினும் இப்படுகொலையுடன் தமது அரசாங்கத்திற்கோ சவுதியின் எவருமே தொடர்புபடவில்லையென சவுதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 14, 2018 13:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க