fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரதமர் தெரேசா மேயிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 13, 2018 10:34

பிரதமர் தெரேசா மேயிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்துள்ளது. அவருக்கெதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நேற்றைய தினம் நடத்தப்பட்டது. இதில் 117 வாக்குகளை பெற்று தெரேசா மே வெற்றிப்பெற்றுள்ளார். இதற்கமைய எதிர்வரும் ஒரு வருட காலத்திற்கு அவரது பிரதமர் பதவிக்கு எவ்வித சவால்களும் விடுக்கப்படாது என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. வாக்கெடுப்பின் பின்னர் உரையாற்றிய பிரதமர் தெரேசா மே, தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார். மேலும் ப்ரெக்சிட் உடன்படிக்கை தொடர்பில் மீள கவனம் செலுத்தப்படுமெனவும் தெரிவித்தார். ஐரோப்பிய சங்க பிரதிநிதிகளுடன் ஒப்பந்தத்தில் மாற்றங்களை கொண்டுவருவது தொடர்பில் இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்த தயாரெனவும் தெரேசா மே தெரிவித்துள்ளார். அனைவருக்கும் உகந்த நாடாக தமது நாட்டை கட்டியெழுப்புவதே எதிர்ப்பார்ப்பெனவும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 13, 2018 10:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க