fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவையின் செயற்பாடுகளை சவாலுக்கு உட்படுத்தும் மனு மீதான விசாரணை ஜனவரி வரை ஒத்திவைப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 12, 2018 13:55

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவையின் செயற்பாடுகளை சவாலுக்கு உட்படுத்தும் மனு மீதான விசாரணை ஜனவரி வரை ஒத்திவைப்பு

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக தாக்கல செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஜனவரி 16, 17 மற்றும் 18ம் திகதிகளில் இம்மனு விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருப்பதற்கும், அவரது அமைச்சரவை செயற்படுவதற்கும் சட்டரீதியில் அனுமதி இல்லையெனவும், அவர்களின் நியமனங்களை செல்லுபடியற்றதாக உத்தரவிடுமாறு கோரி இம்மனு தாக்கல் செய்யப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்மனுவை தாக்கல் செய்தனர். இவ்வழக்கு ஜனவரி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அது வரை இடைக்கால தடையுத்தரவு நீடிக்குமென மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

இதேவேளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் குறித்த இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகள் இன்று இடம்பெற்றன. இது குறித்தான விசாரணையை நாளை மறுதினம் வரை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 12, 2018 13:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க