வடகரோலினா மாநிலத்தில் பனிமூட்டம் காரணமாக மூவர் பலி
Related Articles
அமெரிக்காவின் வடகரோலினா மாநிலத்தில் நிலவி வரும் பனிமூட்டம் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் கார் ஒன்றின் மீது மரமொன்று முறிந்து வீழந்ததனால் ஒருவர் உயிரிழந்தார். சீரற்ற காலநிலை காரணமாக சுமார் ஆயிரத்து 600 விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. 3 இலட்சத்து 80 ஆயிரத்திற்கும் கூடுதலான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.