58 இணையத்தள செய்தி சேவைகளை மூடிவிட்டது : பங்களாதேஷ்
Related Articles
பங்களாதேஷில் 58 இணையத்தள செய்தி சேவைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இவற்றை பன்னிரட்டு மணித்தியாலங்கள் வரை மூடிவிட அந்நாட்டின் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 30 ம் திகதி பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்கவுள்ள பங்களதேஷில் பாதுகாப்பு நிலமைகளை கருத்திற்கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ் இணைத்தளங்கள் அரச தகவல் அமைச்சில் பதிவு செய்யப்படாமையினால் அவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்களை பரிசீலனை செய்வதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பங்களதேஷ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.