fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சபாநாயகருக்கு எதிராக மனுத்தாக்கல்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 10, 2018 16:05

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சபாநாயகருக்கு எதிராக மனுத்தாக்கல்

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி அருண லக்சறி மனுவை தாக்கல் செய்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பாராளுமன்றத்தை கலைப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறித்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுத்ததன் ஊடாக , சபாநாயகர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய அரசியல் யாப்பில் 105யின் கீழ் 3வது சரத்திற்கமைய சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென மனுவின் ஊடாக கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 10, 2018 16:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க