fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 10, 2018 15:11

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்போது மதுபோதையில் வாகனம் செலுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கு தேவையான ஒரு இலட்சம் பரிசோதனை பலூன்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப்பாதுகாப்பு நடவடிக்கை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். விசேடமாக கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் மேலதிகமாக ஆயிரம் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்தி வைப்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 10, 2018 15:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க