சீனாவில் இடம்பெற்ற உலக அழகி போட்டியில் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த வானிசா போண்ஸ் டி லியோன் உலக அழகி பட்டத்தை வென்றார். சீனாவின் ஷான்யா நகரில் 68 வது உலக அழகி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் வெற்றிபெற்று 2018 ம் ஆண்டு உலக அழகியாக தெரிவான வானிசா போண்சுக்கு கடந்த வருடம் உலக அழகி பட்டத்தை வென்ற மனுஷி ஷிலர் உலக அழகி கீரிடத்தை சூட்டினார். வணிஷா போண்ஸ் டி லியோனின் சர்வதேச வணிகத்தில் பட்டப்படிப்பினை முடித்துள்ள அதேவேளை நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.