fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கை

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 4, 2018 14:23

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கை

அனைத்து அமைச்சின் செயளாளர்களுடனான விசேட பேர்ச்சுவார்தை ஒன்று இன்று ஜனாதிபதி மைத்திரிபாலவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு

ஊடக அறிவித்தல்

சகல அமைச்சுக்களின் செயலாளர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் தலைமையில் 2018.12.04ஆம் திகதி முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

“மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களினால் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பிற்கு அமைவாக நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவையினர் தமது கடமைகளை நிறைவேற்றுவதனை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018.12.03ஆம் திகதி இடைக்கால தடை உத்தரவு விடுக்கப்பட்டுள்ளமையினால் நடைமுறையிலுள்ள சட்டத்திற்கமைவாக பொதுச்சேவைகளை எந்தவித தடைகளுமின்றி தொடர்ச்சியாக நிறைவேற்றுவதற்கு தேவையான ஆலோசனைகளும் கட்டளைகளும் சகல அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் மேனமைதங்கிய ஜனாதிபதி அவர்களினால் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரச பாதுகாப்பினைப் போன்றே நாட்டுக்கும் பொதுமக்களுக்குமான தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் குறைவின்றி நிறைவேற்றுமாறு அனைத்து அரச சேவையாளர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களால் பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 4, 2018 14:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo