fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் நிலநடுக்கம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 2, 2018 15:34

இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில்  நிலநடுக்கம்

இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளதென அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவின் தென்மேற்கு கடல் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லையென அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேஷிய நேரப்படி இரவு 10.20க்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பிலும் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. இதேவேளை நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளை தொடர்ந்தும் அவதானித்து வருவதாக அந்நாட்டு தேசிய முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 2, 2018 15:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo