fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்க சீன வர்த்தகப்போர் முடிவு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 2, 2018 15:20

அமெரிக்க சீன வர்த்தகப்போர் முடிவு

அமெரிக்க சீன பொருளாதார போர் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் சீனா மீது அமெரிக்க விதித்துள்ள வரிவிதிப்பு கொள்கையை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்கள் மற்றும் பிறநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் ஆகியவற்றுக்கான வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பன்மடங்காக அதிகரிக்க உத்தரவிட்டிருந்தார். இவ்விடயத்தில் சீனாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனால் சீனாவின் அமெரிக்காவுக்கு எதிராக அதிகளது வரிகளை விதித்தது. இதற்கு பதில் வழங்கிய டொனால்ட் டரம்ப் சீன பொருட்கள் மீது சுமார் 20 ஆயிரம் கோடி மதிப்பிலான வரிகளை சுமத்தினார். இது எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வருமென அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. இந்நிலையிலேயே ஆர்ஜென்டினாவில் நடைபெற்ற ஜீ 20 மாநாட்டின் போது சீன ஜனாதிபதி சீ ஜிங் பின் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை சுமூகமாக இடம்பெற்றதாகவும் வரிகளை தளர்த்த இரு நாட்டு தலைவர்களும் இணங்கியதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்கமைய அமெரிக்க சீனாவுக்கிடையிலான புதிய வரி விதிப்பு வர்த்தக போர் இம்மாதத்துடன் நிறைவுக்கு வரவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 2, 2018 15:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க