பஸ்கட்டண குறைப்பு தொடர்பில் நாளை தீர்மானம்
Related Articles
எரிபொருள் விலைக்குறைப்புக்கு இணைவாக பஸ்கட்டணங்களை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பஸ்கட்டண திருத்தம் தொடர்பில் நாளை தீர்மானிக்கப்படுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தேசிய போக்கவரத்து ஆணைக்குழுவுடன் நாளை முன்னெடுக்கப்படவுள்ள பேச்சுவார்த்தையின் பின்னர் தீர்மானம் அறிவிக்கப்படுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது.