fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

முச்சக்கர வண்டி பயண கட்டண குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலில்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 2, 2018 15:12

முச்சக்கர வண்டி பயண கட்டண குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலில்

இன்று நள்ளிரவு முதல் முச்சக்கரவண்டி பயணங்களின் குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது. அரசாங்கம் மேற்கொண்டுள்ள எரிபொருள் விலைக்குறைப்பை கவனத்தில் கொண்டு பயணக்கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானித்ததாக இலங்கை சுயதொழில் முயற்சியாளர்களின் தேசிய முச்சக்கரவண்டி சங்கம் தெரிவித்துள்ளது. முச்சக்கரவண்டி பயணங்களின் குறைந்தபட்ச கட்டணமாக 60 ரூபா அறவிடப்படுகிறது. இதனை 50 ரூபாவாக குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 10 ம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்பையே முன்னெடுத்து வந்தது. எனினும் தற்போதய அரசாங்கம் பதவியேற்று 34 நாட்களுக்குள் 3 வது முறையாகவும் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 2, 2018 15:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க