பஸ் கட்டண குறைப்பை நடைமுறைப்படுத்தாத பஸ் வண்டிகளை கண்டறியும் வேலைத்திட்டம்

பஸ் கட்டண குறைப்பை நடைமுறைப்படுத்தாத பஸ் வண்டிகளை கண்டறியும் வேலைத்திட்டம் 0

🕔12:49, 31.டிசம்பர் 2018

பஸ் கட்டண குறைப்பை நடைமுறைப்படுத்தாத பஸ் வண்டிகளை கண்டறியும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பஸ் சங்கங்கள் ஊடாக கட்டண குறைப்பு தொடர்பில் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எச்.ஹேமசந்திர தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் முதல் மாகாணங்கள் ரீதியாக பஸ் கட்டண குறைப்பை நடைமுறைப்படுத்தாத பஸ் வண்டிகளை கண்டறியும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுமென அவர்

Read Full Article
சிரியாவில் சமாதானத்தை உருவாக்க ஒன்றிணைந்த வேலைத்திட்டம்

சிரியாவில் சமாதானத்தை உருவாக்க ஒன்றிணைந்த வேலைத்திட்டம் 0

🕔10:53, 31.டிசம்பர் 2018

சிரியாவில் சமாதானத்தை உருவாக்க ஒன்றிணைந்த வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படுமென ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன. தமது நாட்டு இராணுவத்தினரை சிரியாவிலிருந்து வெளியேற்ற அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதனால் ஏற்படக்கூடும் நெருக்கடிகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் அரசியல் ஸ்த்திர தன்மையை ஏற்படுத்துவதே முதற்கட்ட நோக்காகும். இதற்கென துரித செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென ரஷ்யா தெரிவித்துள்ளது.

Read Full Article
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு இழப்பீடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு இழப்பீடு 0

🕔09:32, 31.டிசம்பர் 2018

வடக்கில் ஏற்பட்ட வெள்ள நிலமை குறைவடைந்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள நிலமை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டமே வெள்ளத்தினால் அதிக பாதிப்புக்களை எதிர்கொண்டது. இந்நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக வடக்கில் இடம்பெயர்ந்தவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள்

Read Full Article
குளிரான வானிலை

குளிரான வானிலை 0

🕔08:24, 31.டிசம்பர் 2018

நாட்டின் அதிகமான பிரதேசங்களில் காலை மற்றும் இரவு வேளைகளில் குளிரான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சீரான வரண்ட வானிலை நீடிக்குமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் கிழக்கு மாகாணத்திலும், மாத்தளை மாவட்டத்திலும் சிறிதளவிலான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read Full Article
தகுதி மற்றும் சேவை அனுபவத்திற்கு ஏற்ப பொலிசாருக்கு விரைவில் பதவி உயர்வுகள்

தகுதி மற்றும் சேவை அனுபவத்திற்கு ஏற்ப பொலிசாருக்கு விரைவில் பதவி உயர்வுகள் 0

🕔18:37, 30.டிசம்பர் 2018

தகுதி மற்றும் சேவை அனுபவத்திற்கு ஏற்ப பொலிசாருக்கு விரைவில் பதவி உயர்வுகள் வழங்கப்படுமென பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பொலிசாரை பாராட்டும் வைபமொன்று ராகம பகுதியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். களனி பகுதி பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிசாருக்கு நிதி அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டன. பொலிஸ்

Read Full Article
கொங்கோ இராச்சியத்தில் இன்றைய தினம் ஜனாதிபதி தேர்தல்

கொங்கோ இராச்சியத்தில் இன்றைய தினம் ஜனாதிபதி தேர்தல் 0

🕔17:41, 30.டிசம்பர் 2018

ஆபிரிக்க வலயத்தின் இரண்டாவது மிகப்பெரிய நாடான கொங்கோ இராச்சியத்தில் இன்றைய தினம் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறுகிறது. 40 மில்லியன் மக்கள் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். எனினும் 1.3 மில்லியன் மக்களே இதுவரை வாக்களித்துள்ளதாக தெரியவந்துள்ளது. தேர்தலை முன்னிட்டு கொங்கோ இராச்சியத்தின் முக்கிய நகரங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Read Full Article
சுற்றுலாப் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு அடையாள அட்டை

சுற்றுலாப் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு அடையாள அட்டை 0

🕔17:13, 30.டிசம்பர் 2018

சுற்றுலாப் பயணிகளுக்கு பொருத்தமான சேவையில் ஈடுபடும் கொழும்பு மாவட்ட முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. டுக் டுக் என்ற தேசிய வேலைத்திட்டத்திற்கமைய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் ஆரம்பகட்டமாக 270 சாரதிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த முச்சக்கர வண்டிகளில் பயணிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள்

Read Full Article
அமெரிக்காவின் சில பத்திரிக்கைகள் மீது சைபர் தாக்குதல்

அமெரிக்காவின் சில பத்திரிக்கைகள் மீது சைபர் தாக்குதல் 0

🕔16:59, 30.டிசம்பர் 2018

அமெரிக்காவின் சில பத்திரிக்கைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பத்திரிக்கைகளின் அச்சுப்பணிகள் மற்றும் விநியோக பணிகள் ஆகியன தடைப்பட்டுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், ச்சிகாகோ ட்ரைப்யூன் உள்ளிட்ட பத்திரிக்கைகளின் அச்சுப்பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. சைபர் தாக்குதலானது அமெரிக்காவுக்கு வெளியில் இருந்து நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
அம்பலாங்கொடை பிரதேசத்தில் கைக்குண்டுகள் இரண்டு மீட்பு

அம்பலாங்கொடை பிரதேசத்தில் கைக்குண்டுகள் இரண்டு மீட்பு 0

🕔16:47, 30.டிசம்பர் 2018

அம்பலாங்கொடை பிரதேசத்தில் கைக்குண்டுகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளன. ஹரேவத்த – உஸ்வெல்ல பகுதியில் வைத்து குண்டுகள் மீட்கப்பட்டதாக அம்பலாங்கொட பொலிசார் தெரிவித்துள்ளனர். எஸ்.எப்.ஜீ ரக குறித்த கைக்குண்டுகள் கடற்கரைக்கு அண்மித்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் குறித்த கைக்குண்டுகளை பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொட பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
எகிப்தில் பயங்கரவாதிகளை இலக்கு வைத்து படையினர் தாக்குதல்

எகிப்தில் பயங்கரவாதிகளை இலக்கு வைத்து படையினர் தாக்குதல் 0

🕔16:40, 30.டிசம்பர் 2018

எகிப்தின் இருவேறு பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் கிஷா பகுதியில் வியட்நாமைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சென்ற பஸ்ஸை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் நால்வர் கொல்லப்பட்டனர். இதனையடுத்தே பயங்கரவாதிகளுக்கு எதிரான படைநடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

Read Full Article

Default