தந்தையை அடித்து கொலைசெய்த மகன் கைது 0
தந்தையை பொல்லால் அடித்து கொலைசெய்த மகன் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் நோட்டன் பிரிஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ பகுதியில் இடம்பெற்றுள்ளது. மனநோயாளியான மகனுக்கும் தந்தைக்குமிடையில் ஏற்பட்ட மோதலின் போது மகன் தந்தையை பொல்லால் அடித்து கொலைசெய்துள்ளதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் 74 வயதான ஏ.ஜே.ஜினதாச என அடையாளம் காணப்பட்டுள்ளார்.