வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இந்திய நாட்டவரொருவர் கைது 0
வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இந்திய நாட்டவரொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூர் நோக்கி பயணிப்பதற்கென இன்று அதிகாலை விமான நிலையத்திற்கு வருகைத்தந்த சந்தேக நபர் சுங்க அதிகாரிகளால் கைதாகியுள்ளார். சந்தேக நபரிடமிருந்து ஸ்ரேலின் பவுண், யூரோ மற்றும் சவூதி ரியால் ஆகிய வெளிநாட்டு நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.