தமிழ் மொழியில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு ஆளுநர் பாராட்டு

தமிழ் மொழியில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு ஆளுநர் பாராட்டு 0

🕔12:44, 29.நவ் 2018

அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட மாணவன் செல்வன் மகேந்திரன் திகலொழிபவனை வடமாகாண ஆளுநர் றெஜினொல்ட் குரே அழைத்து பாராட்டி பரிசில் வழங்கினார். இந்த நிகழ்வு நேற்று ஆளுநரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவனான செல்வன் ம.திகலொழிபவன் தமிழ் மொழியில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில்

Read Full Article
ஆப்கான் பாதுகாப்பு பிரிவு மற்றும் தலீபான் பயங்கரவாதிகளுக்கிடையில் மோதல்

ஆப்கான் பாதுகாப்பு பிரிவு மற்றும் தலீபான் பயங்கரவாதிகளுக்கிடையில் மோதல் 0

🕔12:29, 29.நவ் 2018

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு பிரிவு மற்றும் தலீபான் பயங்கரவாதிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் சாதாரண பொதுமக்கள் 30 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 16 தலீபான் பயங்கரவாதிகளும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்தில் மேலும் அதிகளவானோர் காயமடைந்துள்ளனர். தென்மேற்கு ஹெல்மண்டி பகுதியில் இருதரப்பிற்குமிடையிலான குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Read Full Article
காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த ஐரோப்பிய சங்கம் புதிய திட்டம்

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த ஐரோப்பிய சங்கம் புதிய திட்டம் 0

🕔12:11, 29.நவ் 2018

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு ஐரோப்பிய சங்கம் புதிய திட்டமொன்றை தயாரித்துள்ளது. 2050ம் ஆண்டு குறித்த இலக்கை பூரணப்படுத்துவதே எதிர்ப்பார்ப்பாகும். பாதகமான வளி, சூழலுடன் இணைவதை தடுப்பதற்கென அனைத்து நாடுகளின் ஒத்துழைப்பும் தேவையென ஐரோப்பிய சங்கம் தெரிவித்துள்ளது. வர்த்தக மற்றும் ஏனைய பொருளாதார செயற்பாடுகளின்போது சூழல் பாதுகாக்கப்படும் வகையில் செயற்படுவதற்கு நடைமுறைப்படுத்தப்படும் யோசனையொன்று சமர்ப்பிக்கப்படுமென ஐரோப்பிய சங்கம்

Read Full Article
காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்

காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் 0

🕔11:34, 29.நவ் 2018

கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. கொழும்பு முதல், புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பகுதிகளில் இவ்வாறு கடும் காற்று வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Read Full Article
வங்கி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது

வங்கி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது 0

🕔11:33, 29.நவ் 2018

வங்கி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தொம்பே, பாணந்துறை தெற்கு மற்றும் மஹியங்கனை உள்ளிட்ட பிரதேசங்களில் வங்கிகளில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Read Full Article
பெப்ரவரி இறுதிக்குள் சீருடை துணிகளை வழங்க நடவடிக்கை

பெப்ரவரி இறுதிக்குள் சீருடை துணிகளை வழங்க நடவடிக்கை 0

🕔11:27, 29.நவ் 2018

2019ம் ஆண்டு பெப்ரவரி மாத இறுதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை சீருடை வவுச்சர்களுக்கு பதிலாக சீருடை துணியை வழங்க கொள்கை ரீதியான தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Read Full Article
கழிவுத்தேயிலை சுற்றிவளைப்பு

கழிவுத்தேயிலை சுற்றிவளைப்பு 0

🕔11:27, 29.நவ் 2018

கழிவுத்தேயிலையை ஏற்றிச்சென்ற லொறியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது சந்தேக நபரொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் மாவனெல்ல பிரதேசத்தில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Read Full Article
UPDATE : இன்றைய தினமும் ஆளும் கட்சி பாராளுமன்ற அமர்வை புறக்கணித்துள்ளது

UPDATE : இன்றைய தினமும் ஆளும் கட்சி பாராளுமன்ற அமர்வை புறக்கணித்துள்ளது 0

🕔11:16, 29.நவ் 2018

பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியுள்ளன. காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபை அமர்வுகள் ஆரம்பமான நிலையில், இன்றைய தினமும் ஆளும் கட்சி பாராளுமன்ற அமர்வை புறக்கணித்துள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க இதனை தெரிவித்தார். அதேபோல் இன்றைய தினமும் பாராளுமன்ற அமர்வை பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஊடகங்களுக்கு மாத்திரமே

Read Full Article
8 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் நபரொருவர் கைது

8 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் நபரொருவர் கைது 0

🕔11:15, 29.நவ் 2018

ஹெரோயின் போதைப்பொருளுடன் பிலியந்தலை பகுதியில் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 71 வயதான அவரிடமிருந்து 700 கிரேம் போதைப்பொருள் மீட்கப்பட்டது. அவற்றின் பெறுமதி 8 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலகம் தெரிவித்துள்ளது.

Read Full Article
வெளிநாட்டு நாணயத்தொகை மற்றும் தங்க ஆபரணங்களுடன் மூவர் கைது

வெளிநாட்டு நாணயத்தொகை மற்றும் தங்க ஆபரணங்களுடன் மூவர் கைது 0

🕔11:04, 29.நவ் 2018

வெளிநாட்டு நாணயத்தொகை மற்றும் தங்க ஆபரணங்களுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் பெண்கள் இருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களிடமிருந்து யூரோ, அமெரிக்க டொலர் மற்றும் தங்க மோதிரங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்களை புதுக்கடை மூன்றாம் இலக்க நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read Full Article

Default