பொரளை – தெமட்டகொடை பகுதிக்குட்பட்ட ஒரு பகுதி வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது

பொரளை – தெமட்டகொடை பகுதிக்குட்பட்ட ஒரு பகுதி வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது 0

🕔11:21, 30.நவ் 2018

பொரளை – தெமட்டகொடை பகுதிக்குட்பட்ட சிறிதம்ம மாவத்தையின் ஒரு பகுதி மூடப்படவுள்ளது. இன்றுமுதல் எதிர்வரும் 3ம் திகதி வரை வீதி தற்காலிகமாக மூடப்படுமென பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Read Full Article
அரலகங்வில மெதகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

அரலகங்வில மெதகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி 0

🕔11:20, 30.நவ் 2018

அரலகங்வில மெதகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கெப் ரக வாகனமொன்று கால்வாயினுள் விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் அம்பாறை பகுதியை சேர்ந்த சமன் திஸாநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Read Full Article
வவுணதீவு பகுதியில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள்

வவுணதீவு பகுதியில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் 0

🕔11:18, 30.நவ் 2018

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சோதனை சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது

Read Full Article
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் ஜனாதிபதி தலைமையில் திறப்பு

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் ஜனாதிபதி தலைமையில் திறப்பு 0

🕔11:16, 30.நவ் 2018

நான்கு தசாப்தங்களின் பின்னர் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டமான மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் இன்று திறக்கப்படவுள்ளன. நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. மொரகஹகந்த, களுகங்கை திட்டத்தினூடாக நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வான் எல்லையை அடைந்துள்ளது. இதனால் வான்கதவுகள் திறக்கப்படவுள்ளன. வடமத்திய மாகாண மக்களின் நீண்டகால கனவு நிறைவேறும்

Read Full Article
இந்திய கடனுதவியில் கொள்வனவு செய்யப்படவுள்ள ரயில் என்ஜின், இரட்டை வலு தொகுதி அடுத்தவாரம் இலங்கையை வந்தடையவுள்ளது

இந்திய கடனுதவியில் கொள்வனவு செய்யப்படவுள்ள ரயில் என்ஜின், இரட்டை வலு தொகுதி அடுத்தவாரம் இலங்கையை வந்தடையவுள்ளது 0

🕔11:15, 30.நவ் 2018

இந்தியாவின் கடனுதவியின் கீழ் கொள்வனவு செய்யப்படவுள்ள ரயில் என்ஜின் மற்றும் இரட்டை வலு தொகுதி அடுத்தவாரம் இலங்கையை வந்தடையவுள்ளது. ரயில் என்ஜின் உட்பட ஏனைய உபகரணங்கள் கப்பல் மூலம் இலங்கைக்கு எடுத்துவரப்படுவதாக புகையிரத சேவைகள் பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

Read Full Article
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் நாளை திறக்கப்படுகிறது

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் நாளை திறக்கப்படுகிறது 0

🕔20:45, 29.நவ் 2018

நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய பல்நோக்கு அபிவிருத்தி திட்டமான மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தின் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் நாளை திறக்கப்படவுள்ளன. இந் நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொள்ளலுள்ளார். நாளை (30) முற்பகல் மொரகஹகந்த நீர்த்தேக்க திட்ட வளாகத்தையும் பார்வையிடவுள்ளார். ரஜரட்ட மக்களுக்காக ஜனாதிபதி அவர்களின் நீண்டகால கனவை

Read Full Article
சபாநாயகர் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்

சபாநாயகர் ஜனாதிபதியை சந்தித்துள்ளார் 0

🕔20:42, 29.நவ் 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்று மாலை ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் இடம்பெற்றது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (வெள்ளிக்கிழமை) ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களையும் தமிழ் தேசிய கூட்டணியினரையும் இதன் போது சந்திக்க இணங்கியுள்ளதாக என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Read Full Article
நாடாளுமன்ற கூட்டத்தொடர் சட்டவிரோதமானது -சபை முதல்வர்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் சட்டவிரோதமானது -சபை முதல்வர் 0

🕔15:51, 29.நவ் 2018

இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடர் சட்டவிரோதமானது என்று சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.மேலும் இங்கு அவர் உரையாற்றுகையில், பாராளுமன்றத்தின் இன்றைய கூட்டத்தொடர் சட்டவிரோதமாகவும், அரசியல் யாப்புக்கு முரணாக அமைந்ததனால் அதில் பங்கேற்கவில்லை . நீதிமன்ற தீர்ப்புக்களுடன் தொடர்புடைய விடயங்களில் பாராளுமன்றத்திற்கு தலையிடமுடியாது என்று

Read Full Article
யுக்ரேன் ஜனாதிபதி நேட்டோ அமைப்பிடம் கோரிக்கை

யுக்ரேன் ஜனாதிபதி நேட்டோ அமைப்பிடம் கோரிக்கை 0

🕔13:11, 29.நவ் 2018

யுக்ரேன் ஜனாதிபதி பெட்ரோ பொரஷென்கோ நேட்டோ அமைப்பிடம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார். புதிய விசாரணை வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்குமாறு தெரிவித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கருங்கடலில் பயணித்த மூன்று படகுகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் தமது பாதுகாப்புக்காக கருங்கடல் பகுதிக்கு கப்பலொன்றை அனுப்புமாறு நேட்டோ அமைப்பிடம் யுக்ரேன் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

Read Full Article
பாராளுமன்றத்திற்குள் அண்மையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் விசாரணை செய்ய குழு

பாராளுமன்றத்திற்குள் அண்மையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் விசாரணை செய்ய குழு 0

🕔12:47, 29.நவ் 2018

பாராளுமன்றத்திற்குள் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற பிரதி சபாநாயகர் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்கு மேலதிகமாக சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணையும் இடம்பெற்று வருவதாக சபாநாயகர் இன்று பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

Read Full Article

Default