fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 28, 2018 17:35

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது

இதுவரை காலமும் வழக்கு பதிவு செய்யப்படாமல் சிறையில்  உள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று மாலை நடைபெற்றது.

இது தொடர்பாக மேற்கொள்ளபட வேண்டிய பொறிமுறைகள் மற்றும் ஆரம்ப கட்ட நடவடிக்கைக்கள் குறித்து ஆலோசிப்பதற்காக ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசேட குழு சார்பில், விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன், கிழக்கு அபிவிருத்தி பிரதியமைச்சர் வியாழேந்திரன் மற்றும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் மஸ்தான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்.

மேலும் இது தொடர்பில் ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசேட குழு சார்பில் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன், கிழக்கு அபிவிருத்தி பிரதியமைச்சர் வியாழேந்திரன் மற்றும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் மஸ்தான் ஆகியோர் நீதியமைச்சர் சுசில் பிரேமஜயந்த உடனும் முக்கிய கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

விவசாய பிரதி அமைச்சர் வட கிழக்கு விவசாய மக்களுக்கு சிறந்த செயல்திட்ட நகர்வுகளை மேற்கொண்டு வரும் இந்நிலையில் மீனவர்கள்,அரசியல் கைதிகளின் விடுதலை,காணி விடுவிப்பு,மீள்குடியேற்றம்,வாழ்வாதார மேம்பாடுகள்,இயற்கை அனர்த்த சூழ் நிலையின் போதான இழப்பீடு,காப்புறுதி தொடர்பாகவும் கவனம் செலுத்தி குறித்த விடயங்களிற்கு பொறுப்பான அமைச்சுடனும் கலந்துரையாடலை மேற்கொண்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 28, 2018 17:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க