25 லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் சந்தேக நபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை சுங்கப்பிரிவினரால் சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதானவர்கள் காலி மற்றும் மாளிகாவத்தை பகுதிகளைச் சேர்ந்த 17, 28 மற்றும் 31 வயதானவர்களென தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் சார்ஜாவிலிருந்து இலங்கைக்கு வருகைதந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
25 லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் மூவர் கைது
படிக்க 0 நிமிடங்கள்