பதிய பெலெல்ல கண்டி வீதியின் போக்குவரத்து முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. கந்துரகட பிரதேசத்தில் மண்மேடொன்று சரிந்து விழுந்துள்ளமையே இதற்கு காரணமாகும். இன்று அதிகாலை குறித்த மண்மேடு சரிந்து வீதியில் விழுந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மண்மேட்டை அகற்றி, போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.