fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்காக ஒன்றிணைந்து போராட வேண்டும்-அமைச்சர் தொண்டமான்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 24, 2018 10:20

தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்காக ஒன்றிணைந்து போராட வேண்டும்-அமைச்சர் தொண்டமான்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்காக தொழிற்சங்க பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும் என்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கோரியுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கட்சித் தலைமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

நிதியமைச்சில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலும் 600 ரூபா என்ற அடிப்படை நிலைப்பாட்டில் முதலாளிமார் சம்மேளனம் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை வேதனம் ஆயிரம் ரூபா என்பது தனது நிலைப்பாடாகும் என்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை திறைசேரியில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. முதலாளிமார் சம்மேளனத்தையும் தொழிற்சங்கங்களையும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு நிதியமைச்சு அழைத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 24, 2018 10:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க