தேசிய சோள உற்பத்தியை அதிகரிப்பதற்கும், சோள பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கடன் திட்டமொன்றை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சோள உற்பத்தியாளர்களுக்கு நிவாரண வட்டி விகிதத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கடன் திட்ட முறையை ஆரம்பிப்பது தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்றும் சமர்ப்பிப்பட்டது. அமைச்சர் மஹிந்த அமரவீர சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

சோள பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க திட்டம்
படிக்க 0 நிமிடங்கள்