fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாராளுமன்றம் கூட்டப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை விசாரிக்க தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 23, 2018 16:12

பாராளுமன்றம் கூட்டப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை விசாரிக்க தீர்மானம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. பாராளுமன்றத்தை கலைத்தமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், பாராளுமன்றத்தை கூட்டியமைக்கு எதிராக சரத் வீரசேகர மனுதாக்கல் செய்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ம் திகதி குறித்த மனுவை விசாரிக்க பிரதம நீதியரசர் நலின் பெரேரா தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர் குழு தீர்மானித்துள்ளது. மனுவில் சபாநாயகர் பாராளுமன்ற செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற அமர்வை கூட்டியமை அரசியல் யாப்பின் 12வது சரத்தை மீறும் செயலாகும். இதனால் தனது அடிப்படை உரிமை மீறப்படுவதாக மனுதாரர் சரத் வீரசேகர தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 23, 2018 16:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க