fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தொலைக்காட்சி கலை அரச விருது விழாவில் வசந்தம் டி.வி க்கு அதிக விருதுகள்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 22, 2018 15:29

தொலைக்காட்சி கலை அரச விருது விழாவில் வசந்தம் டி.வி க்கு அதிக விருதுகள்

தொலைக்காட்சி கலை அரச விருது வழங்கும் விழாவில் சுயாதீ தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு இம்முறை பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் வசந்தம் டி.வி. நான்கு விருதுகளை வென்றது. அதற்கமைய சிறந்த பண்முக கெமரா வடிவமைப்புடனான நிகழ்ச்சி தயாரிப்புக்கான விருது, வசந்தம் டி.வி ஏற்பாடு செய்த சித் ஸ்ரீராம் நேரடி இசைநிகழ்ச்சிக்காக தயாரிப்பாளர் கே.எஸ்.கோனேஸ்வர ராஜாவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த பாடல் காட்சியமைப்புக்கான அரச விருது டி.தபேசனுக்கு வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த இசைநிகழ்ச்சி தயாரிப்புக்கான விருது வசந்தம் டி.வி யில் ஒளிபரப்பாகும் நம்ம ஹிட்ஸ் நிகழ்ச்சிக்காக ஆர்.தக்ஷலாந்த்துக்கு வழங்கப்பட்டது. இதேவேளை சிறந்த சஞ்சிகை நிகழ்ச்சிக்கான விருது வசந்தம் டி.வி யில் ஒளிபரப்பாகும் கண்மணி நிகழ்ச்சிக்காக கிறிஸ்டினா கிரேஸுக்கு வழங்கப்பட்டது. இதேவேளை சுயாதீன தொலைக்காட்சி இம்முறையும் அரச விருது தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் அதிகளவான விருதுகளை தம்வசப்படுத்தியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 22, 2018 15:29

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க