இலங்கையுடன் காணப்படும் தொடர்புகளை மேலும் விஸ்திரப்படுத்தவுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும். இரு நாடுகளுக்குமிடையில் நீண்டகால உறவு காணப்படுகிறது. அதனை பல்வேறு பிரிவுகளினூடாக மேலும் வலுப்படுத்த எதிர்ப்பார்ப்பதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சர்ஜி சொய்கோ தெரிவித்துள்ளார். இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள எதிர்ப்பார்ப்பதாகவும், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களை அதிகரிக்க எதிர்ப்பார்ப்பதாகவும் ரஷ்யா மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையுடனான உறவுகளை மேலும் விஸ்திரப்படுத்தவுள்ளதாக ரஷ்யா தெரிவிப்பு
படிக்க 0 நிமிடங்கள்