fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்கள் இன்றையதினம் பெயரிடப்படுவார்கள்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 21, 2018 12:32

பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்கள் இன்றையதினம் பெயரிடப்படுவார்கள்

பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்கள் இன்றையதினம் பெயரிடப்படுவார்களென அரசாங்கம் தெரிவித்துள்ளது. பெயர் விபரம் இன்று பாராளுமன்ற பொதுச்செயலாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். பாராளுமன்ற தெரிவுக்குழுவில் 12 உறுப்பினர்கள் அங்கம் வகிக்க முடியும். அதற்கமைய எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்ற சபை அமர்வுகள் ஆரம்பமானதுடன் பாராளுமன்ற பொதுச்செயலாளர் குறித்த பெயர் விபரங்களை சபையில் முன்வைப்பார். பாராளுமன்றத்தில் தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னரே ஏனைய குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்களென்பது குறிப்பிடத்தக்கது. கடற்த 19ம் திகதி பாராளுமன்றம் கூடிய நிலையில் அன்றையதினம் பாராளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களை நியமிப்பதற்கான பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பின்னர் பாராளுமன்றம் 23ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 21, 2018 12:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க