fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நபி பெருமானார் மலர்ந்த தினத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாழ்த்துச்செய்தி

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 20, 2018 14:31

நபி பெருமானார் மலர்ந்த தினத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாழ்த்துச்செய்தி

நபி பெருமானாரின் பிறந்த தினமான இன்று மீலாதுன் நபி தினத்தையொட்டி ஜனாதிபதி மற்றும் பிரதமர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டுமென்ற நபியவர்களின் தத்துவம் அனைத்து மக்களின் அன்றாட வாழ்க்கை நடைமுறைக்கு வழிகாட்டுவதாக அமையவேண்டுமென இன்றைய தினத்தில் உளப்பூர்வமாக பிரார்த்திக்கின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். பிரபஞ்சத்தின் அனைத்து படைப்புககளும் குறித்த ஒரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக படைக்கப்பட்டுள்ளன என்பதே புனித அல்குர்ஆனின் கருத்தாகும். மனிதனும் ஒரு குறித்த நோக்கத்துடனேயே படைக்கப்பட்டுள்ளான். அந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக காலத்திற்கு காலம் இவ்வுலகிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நபிமார்களில் இறுதியாக அனுப்பப்பட்டவர் முஹம்மது நபியாவார். அனைத்து மனிதர்களுக்கும் சமயுரிமை கிடைக்கப்பெறவேண்டுமென நபியவர்கள் போதித்தார்கள். தொழிலாளர்களின் வியர்வை காய்வதற்கு முன்னரே அவர்களுக்கான கூலி வழங்கப்படவேண்டுமென அவர் போதித்தார். நபிகளாரின் இன்றைய பிறந்த தினத்தில் இலங்கை உட்பட உலக வாழ் முஸ்லிம்களுக்கு தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்;டார்.
இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தியில் புனிதரான முஹம்மது நபியவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூறும் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் மக்களுக்கு எனது உளமார்ந்த மீலாதுன் நபி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் சமயக்கிரிகைகளில் ஈடுபட்டு ஏழைகளுக்கு உதவிசெய்து நபியவர்களின் முன்மாதிரியை நினைவு கூர்ந்த வண்ணம் இந்த புனித தினத்தை கொண்டாடுகின்றனர். உலகிலுள்ள இஸ்லாமிய நாடுகள் எப்போதும் இலங்கைக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் போதெல்லாம் நிபந்தனையின்றி ஒத்துழைப்பு வழங்கி வந்துள்ளன. இவ்வாறு எமக்கு வழங்கிய சர்வதேச ஒத்துழைப்பிற்காக நன்றியை தெரிவிப்பதற்காகவும் அந்நாடுகளின் அனைத்து இன இஸ்லாமியர்களுக்கும் இப்புனித நன்நாளில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

இஸ்லாத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து சவால்களையும் வெற்றிகொள்ளும் வகையில் அல்குர்ஆன் போதிக்கும் நெறிமுறைகளையும் நபிகள் நாயகம் அவர்களின் வழிகாட்டல்களையும் முழுமையாக பின்பற்ற முன்வருவோமென நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கள் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புள்ள விடுத்துள்ள மீலாதுன் நபிவிழா வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அழிவுச் செயற்பாடுகளுக்கு இஸ்லாமியர்கள் பங்குதாரர் ஆவாதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. அதன் அடிப்படையில் மிகச்சிறந்த சமூகமாக இந்த நாட்டில் வாழ்வதோடு எமது நாட்டை உலகிலேயே சிறந்த தேசமாக கட்டியெழுப்ப அனைவரும் இந்த சிறந்த நாளில் திட சங்கர்ப்பம் பூணுவோம் என தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ள அமைசசர் எல்லாம் வல்ல இறைவனின் அருளும் அன்பும் அனைவர் மீதும் உண்டாவது பிராத்திக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 20, 2018 14:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க