fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோதமான முறையில் தங்கத்தை கடத்த முயன்ற மூவர் கைது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 20, 2018 12:08

சட்டவிரோதமான முறையில் தங்கத்தை கடத்த முயன்ற மூவர் கைது

சட்டவிரோதமான முறையில் தங்கத்தை கடத்த முயன்ற மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். 24 கரெட் தங்கத்தை பெண்டன் வடிவில் தயாரித்து எடுத்துவந்த நிலையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து இவர்கள் நகையை எடுத்துவந்துள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 639 கிராம் எடையுடைய 39 இலட்சத்து 31 ஆயிரத்து 850 ரூபா பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் மினுவாங்கொட, ஜா-எல மற்றும் கொழும்பு – 15 ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது. அவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதோடு தங்கம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 20, 2018 12:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க