பியகம மல்வானை பகுதியில் 6 மாத குழந்தையொன்றின் சடலம் மீட்பு
Related Articles
பியகம மல்வானை பகுதியில் 6 மாத குழந்தையொன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீடொன்றுக்கு அருகில் இருந்த கழிவகற்றும் பகுதியிலிருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் குறித்த இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த குழந்தை இதுவரை அடையாளம் காணப்படவில்லையென பியகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.