fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

27 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 19, 2018 12:37

27 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை சுங்க அதிகாரிகளால் அவை கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 49 வயதுடைய பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து 273 வெளிநாட்டு சிகரெட் பக்கெற்றுக்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி 27 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. டுபாயிலிருந்து வருகைதந்த குறித்த இரு சந்தேகநபர்களின் பயணப்பையில் சிகரெட் தொகை மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் சுங்க அதிகாரிகளால் அவை கைப்பற்றப்பட்டுள்ளன. பண்டிகை காலத்தை முன்னிட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கென சிகரெட் தொகை நாட்டுக்கு எடுத்துவரப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 19, 2018 12:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க