fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பதில்களை வழங்கிவிட்டேன்-ட்ரம்ப்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 17, 2018 12:38

பதில்களை வழங்கிவிட்டேன்-ட்ரம்ப்

2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த விசாரணையில் தனது பதில்களை அளித்து முடித்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அனைத்து கேள்விகளுக்கும் எளிமையாக பதில் அளித்துவிட்டதாக தெரிவித்த டிரம்ப், அவை ராபர்ட் முல்லர் குழுவிடம் சமர்பிக்கப்படவேண்டும் என்று தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் டிரம்பின் தேர்தல் பிரசாரம் குழுவுடன் ரஷ்யாவுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து முல்லர் விசாரித்து வருகிறார்.

ஆனால் ரஷ்ய தலையீட்டை டிரம்ப் மறுப்பதோடு, இதனை ஒரு “சூனிய வேட்டை” என்றும் தெரிவித்து வருகிறார்.

ட்விட்டரில் முல்லர் ஒரு “குழப்பவாதி” என்றும், இந்த விசாரணை “முழுக்க கேளியானது” என்றும் இந்த நீண்டகால “விசாரணையில் ஈடுபட்டிருப்பவர்கள் தேசத்துக்கு ஒரு அவமானம்” என்றும் அவர் தெரிவித்தார்.

bbc

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 17, 2018 12:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க